வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு: 6 வயது சிறுவன் பலி

களுத்துறை, ரஜவத்தை, கமகொட பகுதியிலுள்ள வீடொன்றின் மீது வீசப்பட்டதாகக் கூறப்படும் பெற்றோல் குண்டினால் தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரஜவத்த – கமகொட வீதி பகுதியிலுள்ள வீடொன்றுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மோட்டார்சைக்கிளில் வந்த இருவர், பெற்றோல் நிரப்பிய போத்தலை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த தாக்குதலில் 28 வயதுடைய பெண்ணும் 6 வயதுடைய சிறுவனும் காயமடைந்து களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

குழந்தையின் தாய் தற்போது வெளிநாட்டில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.