கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டவர் கைது
கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முயன்ற நபர் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
லண்டனில் இருந்து வருகை தந்த குறித்த சந்தேக நபர் குடும்பப் பிணக்கு தொடர்பாக தன்னை அந்த வழக்கில் இருந்துவிடுவிக்குமாறு கோரி தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.சதுரங்கவிற்கு தர்மபுர பொலிஸ் நிலைய வளாகத்தில் வைத்து 50 ஆயிரம் ரூபா இலஞ்சம் வழங்க முயன்றுள்ளார்.
இந்நிலையில் குறித்த சந்தேக நபர் தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.சதுரங்கவினால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
