மியன்மார் நில அதிர்வில் சீன பிரஜைகள் 12 பேர் பாதிப்பு

மியன்மார் நிலஅதிர்வில் சீன பிரஜைகள் 12 பேர் காயமடைந்துள்ளதாக மியன்மாரில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

சீன பிரஜைகளின் தற்போதைய நிலை தொடர்பில் கண்காணித்துவருவதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மியன்மாரில் ஏற்பட்ட நிலஅதிர்வு தென்மேற்கு சீனாவின் சில பகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.