பல் அறுவை சிகிச்சை நிபுணர் மீது தாக்குதல்: சந்தேக நபருக்கு விளக்கமறியல்
கேகாலை வைத்தியசாலையில் பல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கண்டி பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் கேகாலை நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேகாலை பகுதியில் பணிபுரியும் பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் அண்மையில் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
