
எச்சரிக்கை மட்டத்திற்கு உயரும் வெப்பநிலை
நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலையானது இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை மட்டத்தை எட்டக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொது மக்கள் போதியளவு நீர் அருந்துமாறும், இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வயோதிபர்கள், சிறுவர்கள் மற்றும் நோயாளர்கள் குறித்தும் மிகுந்த அவதானம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
