கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!
-மூதூர் நிருபர்-
புனித நோன்புப் பெருநாளினை முன்னிட்டு, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் புனித நோன்புப் பெருநாள் விடுமுறை தினமான 31 ஆம் திகதிக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்கள் அறிவித்துள்ளார்.
அதற்கான பதில் பாடசாலையானது சனிக்கிழமை நடைபெறும் எனவும் அத்துடன் கிழக்கு மாகாணத்திலுள்ள சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள் வழமைபோல் நடைபெறுமெனவும் தெரியப்படுத்தியுள்ளார்.
