இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து : இளைஞன் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் சுன்னாகம் – கந்தரோடை, பழனி கோவிலடி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று சனிக்கிழமை இடம்பெற்ற இவ்விபத்தில் சிவராசா பிரவீன் (வயது 19) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளானது, இன்னொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் மேலும் ஒருநபர் சிக்கிய நிலையில் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

விபத்து சம்பவம் குறித்து விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.