நீச்சல் குளத்தில் குளிக்கச் சென்ற ஜேர்மன் பிரஜை நீரில் மூழ்கி உயிரிழப்பு!

பெந்தோட்டை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வரஹேன பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியின் நீச்சல் குளத்தில் குளிக்கச் சென்ற ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த 83 வயதானவர் என தெரியவந்துள்ளது.

சடலம் பலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பெந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.