நாட்டின் பல பகுதிகளில் நாளை மழை பெய்யக்கூடும்!
நாட்டின் பல பகுதிகளில் நாளை சனிக்கிழமை மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
