ஆளுநருக்கும் உலக வங்கி பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு

-மூதூர் நிருபர்-

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

குறித்த சந்திப்பில், கிழக்கு மாகாணத்தில் பொருளாதார மேம்பாட்டிற்காக உலக வங்கியால் செயல்படுத்தப்படக்கூடிய சாத்தியமான திட்டப் பகுதிகள் குறித்து நீண்ட விவாதம் நடைபெற்றது.

சுற்றுலா, விவசாயம், மீன்பிடி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தினை மேம்படுத்தல் குறித்து முக்கியமாக பல விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடல் நடைபெற்றன.