தாய்லாந்ததில் சக்திவாய்ந்த நில நடுக்கம்

தாய்லாந்து – மியான்மாரில் இன்று வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி நண்பகல் 12:50 மணிக்கு (06:20 GMT) சாகிங் நகரின் வடமேற்கே 16 கிலோமீட்டர் (10 மைல்) தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது.

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கின் சதுசாக் பகுதியில் கட்டுமானப் பணிகளில் இருந்த, இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பாங்காக்கில் மெட்ரோ மற்றும் லைட் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்