
லொறி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: 4 வயது சிறுவன் மரணம்
கேகாலை, பாதுக்கை – கொழும்பு வீதியில் லியன்வல சந்திக்கு அருகில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உயிரிழந்துள்ளதாக பாதுக்கை பொலிஸார் தெரிவித்தனர்.
லொறி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுவன் படுகாயமடைந்துள்ள நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னவலை பிரதேசத்தைச் சேர்ந்த 4 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்தின் போது குறித்த மோட்டார் சைக்கிளில் நான்கு பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை பாதுக்கை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
