மட்டக்களப்பில் லொறியில் சிக்கி சேதமடைந்த தொலைத்தொடர்பு வலையமைப்பு கம்பி

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பழுகாமம் சந்தியூடாக பயணித்துக்கொண்டிருந்த லொறி வீதியை குறுக்கறுத்து இணைக்கப்பட்டிருந்த இலங்கை தொலைத்தொடர்பு வலையமைப்பு கம்பி வடங்களை அறுத்துள்ளது.

லொறியில் வடம் சிக்கிக்கொண்டதால் தொலைத்தொடர்பு வலையமைப்பு வடம் இணைக்கப்பட்டிருந்த தூண் ஒன்றும் முறிந்து விழுந்துள்ளது.

தொலைத்தொடர்பு வலையமைப்பு கம்பி வடங்கள் வீதியின் குறுக்காக கிடப்பதால் இப் பகுதியினூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

  • Beta

Beta feature

  • Beta

Beta feature