மட்டக்களப்பில் இடம்பெற்ற மாஸ்டர் சிவலிங்கத்தின் ஜனன தினத்தை நினைவு கூறும் நிகழ்வு

மட்டக்களப்பில் கதைமாமணி மாஸ்டர் சிவலிங்கத்தின் 92 ஆவது ஜனன தினத்தை நினைவு கூறும் முகமாக ஆணிவேர் உற்பத்திகளினால் இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் கூழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வானது ஆணிவேர் உற்பத்திகளின் இணை நிறுவர்களான திருமதி.சுஜிக்கா ஜனகன் மற்றும் திருமதி.விஜயபரணி ஜயசுதன் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இதன் போது பொது மக்களுக்கு சோளன் கூழ் இலவசமாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்வினை மாஸ்டர் சிவலிங்கத்தின் மகன் வைத்தியர்.விவேகானந்தன் ஆரம்பித்து வைத்ததுடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் நலன்விரும்பிகள் ஆணிவேர் ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்