
தொழிலாளர் அமைச்சை டிஜிட்டல் மயப்படுத்த நடவடிக்கை!
தொழிலாளர் அமைச்சை டிஜிட்டல் மயப்படுத்தி அதன் ஊடாக விரைவான சேவையை திறம்பட மக்களுக்கு வழங்குவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் அனில் ஜயந்த பெர்ணான்டோ உள்ளிட்டவர்களின் தலைமையில் நடைபெற்றது.
தொழிலாளர் திணைக்களத்தின் சேவைகளை விரைவிலும், திறம்படவும் செய்ய வேண்டிய தேவைகள் தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதாகத் தொழிலாளர் அமைச்சு குறிப்பிட்டுள்ளது
