இறப்பர் பால் ஏற்றிச் சென்ற தாங்கி ஊர்தி விபத்து: இருவர் பலி
களுத்துறை, பதுரலிய – கலவான வீதியில் இறப்பர் பால் ஏற்றிச் சென்ற தாங்கி ஊர்தி ஒன்று 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த மற்றுமொருவர் கலவான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புலத்சிங்கள பகுதியில் உள்ள மரப்பலகை தொழிற்சாலையில் பணிபுரிந்த இரண்டு ஊழியர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
செங்குத்தான பகுதியில் தாங்கி ஊர்தி வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியில் சறுக்கியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கலவானை பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
