
விலங்குகள் கணக்கெடுப்பின் அறிக்கை நாளை
பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்குகள், மயில்கள் மற்றும் அணில்கள் குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அறிக்கை நாளை வெள்ளிக்கிழமை வெளியிடவுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
விவசாயப் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்புக்கு அமைவாக, அவற்றை முகாமைத்துவம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே விவசாய அமைச்சர் இதனை மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
