20 அடி ஆழமுள்ள நானுஓயா ஆற்றில் பாய்ந்த ஜீப்

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா பிளாக்பூல் சந்திக்கு அருகில் இன்று வியாழக்கிழமை ஜீப் வண்டி வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.

கினிகத்தேனவிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ஜீப் வண்டியே இவ்வாறு விபத்திற்குள்ளான நிலையில் இருவர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜீப் வண்டியின் சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டமையால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த ஜீப் பிரதான பாதையிலிருந்து கொன்கிரீட் தூண்களை உடைத்து, 20 அடி ஆழமுள்ள நானுஓயா ஆற்றில் கவிழ்ந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்