வாகன விபத்து: 15 பாடசாலை மாணவர்கள் காயம்
ஹொரணை – இரத்தினபுரி வீதியில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் 15 பாடசாலை மாணவர்களும் மூன்று பெற்றோர்களும் காயமடைந்துள்ளனர்.
தனியார் பேருந்து சிறிய வகை லொறியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்களில் லொறி சாரதி மற்றும் உதவியாளரும் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
காயமடைந்தவர்கள் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஆபத்தான நிலையில் இருந்த லொறி உதவியாளர் உட்பட பாடசாலை மாணவர்கள் சிலர் மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஹொரணை நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் இங்கிரிய நோக்கி பயணித்த லொறியுமே இவ்வாறு மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கிரிய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
Beta feature
Beta feature
