மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்-

யாழில் மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

4ஆம் வட்டாரம்-மண்கும்பான் பகுதியைச் சேர்ந்த, ஏரம்பு தட்சணாமூர்த்தி (வயது 75) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 16ஆம் திகதி இவர் பூப்புனித நீராட்டு விழாவுக்கு செல்லும் போது, வீதியை கடந்துள்ளார், இதன்போது அதிவேகமாக வீதியால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர்மீது மோதியதில், அவர் அவ்விடத்திலேயே மயக்கமடைந்துள்ளார்.

பின்னர் அவரை வேலணை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று புதன்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள <a href=”https://bit.ly/3m7D59z”>மின்னல்24</a> இணையத்தளத்தை பார்வையிடவும்