
திருமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவியாக புனிதவதி துஷ்யந்தன் தெரிவு
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தேர்வில் சட்டத்தரணி புனிதவதி துஷ்யந்தன் 2025/2026 ஆண்டுக்காக தெரிவு செயயப்பட்டுள்ளார்.
குறித்த தெரிவானது நேற்று செவ்வாய்க்கிழமை திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
திருகோணமலையை வசிப்பிடமாகவும், யாழ்பாணம் காரை நகரை பிறப்பிடமாக கொண்ட இவர் கொழும்பு பல்கலைகழகத்தில் 2005 ஆம் ஆண்டு சட்டமானி பட்டத்தினையும், 2006ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற சட்டதரணியாக பதவி ஏற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
