மாஹோவிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயில் தடம் புரண்டதால் சேவை பாதிப்பு

மாஹோவிலிருந்து மட்டக்களப்புக்கு நோக்கிச் பயணித்த ரயில் மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டதன் காரணமாக ரயில் சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பிரதான ரயில் நிலையத்தை நோக்கி இன்று புதன்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் பயணித்த புகையிரதமே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.

இதன் காரணமாக மட்டக்களப்பு பிரதான புகையிரத நிலையத்திற்கான பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு ரயில் நிலைய பொறுப்பதிகாரி பேரின்பராஜா தெரிவித்தார்.

சேவையினை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

புகையிரதம் தடம்புரண்டதன் காரணமாக அதில் வருகை தந்த பயணிகளும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதுடன் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

 

  • Beta

Beta feature