காரைதீவு பிரதேச சபையினால் கால்நடை உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்
காரைதீவு பிரதேச பிரதான வீதிகள் மற்றும் உள்ளக வீதிகளில் திரியும் கட்டாக்காலி மாடுகளால் அண்மைக்காலமாக விபத்துக்கள் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் கட்டாக்காலிகளாக திரியும் மாடுகளை பொலிஸாரும் பிரதேச சபையினரும் கையகப்படுத்தி குறித்த கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாடுகளின் உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை வீதிகளில் அலைய விடாமல் பாதுகாப்பான முறையில் அடைத்து வைத்து வளர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Beta feature

