கரையோர பகுதிகளில் முதலைகளால் அச்சுறுத்தல்

கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை மற்றும் பாணந்துறை ஆகிய பகுதிகளில் முதலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை உயிர்காக்கும் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் மீனவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த பகுதிகளிலுள்ள பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு இலங்கை உயிர்காக்கும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.