பால் ஏற்றி பயணித்த பவுசருடன் மோதிய மோட்டார் சைக்கிள்: இளைஞன் மரணம்
அவிசாவளை – கண்டி பிரதான வீதியில் அங்குருவெல்ல பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளும் பால் ஏற்றிச்சென்ற பவுசரும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
