யோஷிதவுடன் சென்ற மூவரும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் சரண்

இரவு நேர களியாட்ட விடுதியில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுடன் சென்ற மூவரும் கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வு பிரிவில் சரணடைந்துள்ளனர்.

கொம்பனி தெரு பகுதியில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதியில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

இந்த சம்பவத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுடன் சென்ற மூவர் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

இந்தநிலையில் குறித்த நபர்கள் கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வு பிரிவில் சரணடைந்துள்ளனர்.