மட்டக்களப்பை சேர்ந்த இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர் ஜனாதிபதியின் உதவிச் செயலாளராக நியமனம்

மட்டக்களப்பு வந்தாறுமூலை கிராமத்தைச் சேர்ந்த இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர் ந.சஞ்ஜீபன்  ஜனாதிபதியின் உதவிச் செயலாளராக (அபிவிருத்தி நிருவாகம்) நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனம் ஜனாதிபதியின் அபிவிருத்தி நிருவாகத்திற்கு பொறுப்பாக பொது சேவை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பிரதேசத்திலிருந்து இவ்வாறான ஒரு பொறுப்புமிக்க உயர் பதவிக்கு இளம் வயதில் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயம், செங்கலடி மத்திய கல்லூரி, மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன் கிழக்கு பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவப் பட்டம் பெற்ற வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.