
விசேட சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள்!
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, விசேட சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இன்று செவ்வாய்க்கிழமை முதல் மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் களஞ்சியசாலைகள் என்பன சோதனைக்குப்படுத்தப்படவுள்ளன.
இதன்போது, காலாவதியான உணவு மற்றும் மாற்றியமைக்கப்பட்ட தகவல்களுடன் கூடிய பொருட்கள் சந்தைக்கு விநியோகிப்பதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில், பல்பொருள் அங்காடிகள், சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் விற்பனை நிலையங்கள் என்பனவும் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலத்தில் நுகர்வோர், பொருட்களை இணையவழியில் கொள்வனவு செய்யும் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.
