சதாசிவம் வியாழேந்திரனுக்கு விளக்கமறியல்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட அவர், புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்க பல தடவை அழைப்பு விடுத்த போதும் சமூகமளிக்காத முன்னாள் இராஜங்க அமைச்சர் ச.வியாழேந்திரன், இன்று வாக்குமூலம் வழங்க சென்ற போது கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது