வீட்டில் ரகசியமான முறையில் கசிப்பு உற்பத்தி: 20 வயது இளைஞன் கைது

-கிளிநொச்சி நிருபர்-

கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் வீட்டில் ரகசியமான முறையில் மேற்கொள்ளப்பட்ட கசிப்பு உற்பத்தி சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரம் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரம் பகுதியில் வீட்டின் குளியல் அறை பகுதியில் சூட்சுமமான முறையில் நிலத்தை தோண்டி சந்தேகம் ஏற்படாத வகையில் கோடா பரல் தாக்கப்பட்டு தண்ணீர் குடத்தில் குழாய்கள் பொருத்தப்பட்டு கேஸ் அடுப்பு மூலம் தீ மூட்டப்பட்டு குறித்த கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ள.

380 லீட்டர் கோடாவும் 20 லீட்டர் கசிப்பும் கசிப்பு உற்பத்திக்கான பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைத செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.