
மழைக்காரணமாக எதிர்வரும் நாட்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்!
நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் மழைக்காரணமாக எதிர்வரும் நாட்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனச் சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 10 ஆயிரத்து 886 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கடும் காய்ச்சலுடனான தலைவலி, குமட்டல், வாந்தி, தோளில் சிவப்பு புள்ளிகள், இரத்தபோக்கு, தசை மற்றும் மூட்டு வலி போன்ற நோய் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக வைத்தியசாலைக்கோ அல்லது தகுதி வாய்ந்த வைத்தியரிடமோ சென்று உரிய சிகிச்சையை பெற்றுக் கொள்ளுமாறு தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவு பொதுமக்களைக் கோரியுள்ளது.
