காசநோயினால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 இலட்சம் பேர் உயிரிழப்பு!

நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 8,000 முதல் 10,000 பேர் வரை காசநோயினால் பாதிக்கப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பதாகக் கண்டி தேசிய வைத்தியசாலையின் சுவாசநோய் சிகிச்சை நிபுணர் வைத்தியர் துஷ்மந்த மெதகெதர தெரிவித்துள்ளார்.

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 இலட்சம் பேர் காசநோயினால் உயிரிழப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், ஒவ்வொரு நிமிடத்துக்கும் ஒருவர் வீதம் உலகின் ஏதோவொரு பகுதியில் இந்த நோய்க்கு ஆளாவதாக புள்ளிவிபரங்கள் ஊடாக அறியமுடிகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுவாசிக்கும் எந்தவொரு நபரும் இந்த நோய்க்கு ஆளாகக்கூடும் எனவும் வேறு எந்த விசேட காரணிகளும் இல்லை எனவும் சுவாசநோய் சிகிச்சை நிபுணர் வைத்தியர் துஷ்மந்த மெதகெதர குறிப்பிட்டுள்ளார்.