உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்-

பதுளையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்து நிரப்பி சுடக்கூடிய துப்பாக்கியுடன் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

கலராவ வெரகொட பல்லேகீருவ லுணுகலை பகுதியை சேர்ந்த 64 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

லுணுகலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்ட போது குறித்த நபரின் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் இன்று திங்கட்கிழமை பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.