அக்கரைப்பற்று – அம்பாறை பிரதான வீதியில் விபத்து: ஒருவர் படுகாயம்
அக்கறைப்பற்று அம்பாறை பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டு டிப்பர் வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று பிரதான வீதியில் எதிர் எதிரே பயணித்துக்கொண்டிருந்த டிப்பர்வாகனங்கள் மோதிய நிலையில் அருகில் பயணித்த மோட்டார் சைக்கிள் குறித்த விபத்தில் சிக்கியுள்ளது.
இதன்போது மோட்டார்சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் படுகாயமடைந்து அக்கரைப்பற்று வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அக்கரைப்பற்று போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Beta feature
