
யாழில் பெருமளவான கேரளக் கஞ்சா மீட்பு
-யாழ் நிருபர்-
வடமராட்சி – மருதங்கேணி பகுதியில் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை பெருமளவான கேரளக் கஞ்சா மீட்கப்பட்டது.
யாழ்ப்பாண இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மருதங்கேணி பொலிஸாருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில், இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது ஆழியவளை கடற்கரையில் 85 கிலோகிராம் கேரள கஞ்சா அடங்கிய 40 பொதிகள் கைப்பற்றப்பட்டன.
இதன் மதிப்பு 17 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக மருதங்கேணி பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
