சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற நபர் கைது
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உழவனுர் மற்றும் கல்லாறு பகுதிகளில் அனுமதி இன்றி மணல்யார் அமைத்து மணல் வியாபாரத்தில் ஈடுபட்டசந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கல்லாறு பகுதியில் பொது இடத்தில் மணல் சேகரித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் இருந்தமணலும் பொலிஸாரால் பறி முதல் செய்யப்பட்டுள்ளதுடன் இச்சம்பவத்தின் போது 28 கியூப் மணல் பொலிஸாரால் பறி முதல் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை அதே பகுதியில் இருந்து அனுமதி பத்திரம் இன்றி மணலை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தடையப் பொருட்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
