
60 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை பெருமளவான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இராணுவ புலனாய்வு பிரிவினரும் பருத்தித்துறை பொலிஸாரும் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இதன் போது, 24 பொதிகளில் 350 கிலோ எடையுடைய கேரளா மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட கஞ்சாவின் மொத்த பெறுமதி 60 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
