
ஒன்றிணைந்த பிள்ளையான் மற்றும் கருணா!
மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ புதிய கூட்டமைப்பில், கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன் இணைந்து கொண்டதுடன், அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு றிவேரா ஹோட்டலில் சைச்சாத்திடப்பட்டது
நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவை தொடர்ந்து, உள்ளூராட்சி தேர்தலில் களமிறங்குவதற்காக புதிய முயற்சியொன்றை முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்கொண்டு, ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ எனும் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு, அதில் பிள்;ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகத்தினரும் இடையிலான உத்தியோகபூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கடந்த 15 ம் திகதி சைச்சாத்திட ப்பட்டது
இந்த கூட்டணி நடக்க இருக்கும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் இணைந்து களமிறங்கியுள்ளது
இந்த நிலையில், கிழக்கு தமிழர் கூட்டமைப்புடன் கருணா தலைமையிலான தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், இன்று கைச்சாத்தியதையடுத்து பிரிந்திருந்த கருணா பிள்ளையான் மீண்டும் இணைந்துள்ளனர்.தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவர் நாகலிங்கம் திரவியம், பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் தெய்வநாயகம் செந்தூரன் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.








