
அஞ்சல் பரிமாற்றகத்தில் 17.8 மில்லியன் பெறுமதியான போதைப்பொருள்
கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தில் இருந்து ஒருகோடியே 78 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
பிரான்ஸ், அமெரிக்கா, கனடா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து கடந்த இரண்டு வாரங்களில் இலங்கைக்கு குறித்த பொதிகள் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நாடுகளில் இருந்து யாழ்ப்பாணம், கண்டி, நீர்கொழும்பு, ஜா-எல, வெள்ளவத்தை, நுகேகொடை, தங்காலை மற்றும் மஹியங்கனை ஆகிய பகுதிகளில் உள்ள முகவரிகளுக்கு இந்த போதைப்பொருட்கள் அனுப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
