விமானப்படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம் விபத்து

குருணாகல் – வாரியபொல, மினுவங்கெட்டே அருகே விபத்துக்குள்ளான இலங்கை விமானப்படையின் கே8 (K8) ரக பயிற்சி விமானத்திலிருந்து பாதுகாப்பாகத் தரையிறங்கிய இரண்டு விமானிகளும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களது நிலைமை பாரதூரமாக இல்லை என விமானப் படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானிகள் பயிற்சி பெறும் கபீர் ரக விமானம் வாரியபொல – மினுவங்கெட்டே பகுதியில் இன்று காலை விபத்துக்குள்ளானது.

குறித்த விமானத்தில் இருந்த விமானிகள் இருவரும் பரசூட்டின் உதவியுடன் பாதெனிய பகுதியில் தரையிறங்கியதாக இலங்கை விமான படையின் பேச்சாளர் க்ரூப் கெப்டன் எரந்த கீகனகே தெரிவித்துள்ளார்.

விமானம் விபத்துக்குள்ளான மற்றும் விமானிகள் தரையிறங்கிய பகுதிகளுக்கு இரண்டு உலங்கு வானூர்திகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை விமானப் படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.