
சிறுபோக பயிர்ச் செய்கை ஆரம்பக் கூட்டம்
கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவின் சிறுபோக பயிர்ச் செய்கைக்கான ஆரம்ப கூட்டமானது பிரதேச செயலாளர் கா.சித்திரவேல் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றுவியாழக்கிழமை இடம்பெற்றது.
அதிகாரிகளினால் திட்ட முகாமைத்துவ குழுக் கலந்துரையாடப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.
பிரதேசத்தில் சிறு போக நெற்செய்கை மேற்கொள்வதற்கான நேர அட்டவணை, மானிய உரம் வழங்கள், காப்புறுதி, அறுவடை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பான தீர்மானங்கள் தெரிவிக்கப்பட்டன.
மத்திய நீர்ப்பாசன பணிப்பாளர், விவசாய பணிப்பாளர், மாகாண நீர்ப்பாசன பிரதி பணிப்பாளர், நீர்பாசன பொறியியலாளர், கமநல சேவைகள் நிலைய கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய அமைப்பினர், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



