
இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட அரிய வகை வன உயிரினங்கள்
இந்தியாவின் வேலூரைச் சேர்ந்த பயணி ஒருவரின் உடைமைகளைச் சோதனை செய்தபோது இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட அரிய வகை வன உயிரினங்கள் மதுரையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
52 ஆமைகள், 4 பல்லிகள், 8 குட்டி பாம்புகள் என மொத்தம் 64 வன உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடத்தி வரப்பட்ட உயிரினங்களை நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
