
ஐக்கிய மக்கள் சக்தி திருகோணமலையில் வேட்பு மனு தாக்கல்
-மூதூர் நிருபர்-
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள 13 உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி இன்று வியாழக்கிழமை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தது.
ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தலைமையில் இவ் வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றங்களிலிருந்து 136 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.இதற்காக 319,399 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
