திடீரென தீப்பற்றிய கார்
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி உருத்திரபுரம் பொறிக்கடவை வீதியில் நேற்று புதன்கிழமை இரவு எட்டு மணியளவில் கார் ஒன்று திடீரென தீ பற்றி எரிந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த காரினை பெண்ணொருவரே செலுத்தி வந்த நிலையில் குறித்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த தீ விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
