
மோட்டார் சைக்கிளும், சைக்கிளும் விபத்து : முதியவர் உயிரிழப்பு!
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தியேட்டர் வீதி, இணுவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த கதிரவேலு கந்தசாமி (வயது 69) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மருதனார்மடத்தடியில் இருந்து உரும்பிராய் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன், சைக்கிளில் வந்த குறித்த முதியவர் மோதுண்டுள்ளார்.
இந்நிலையில் காயமடைந்த இருவரும் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இருப்பினும் குறித்த முதியவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
