
ஜனாதிபதிக்கும் விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்திற்கும் இடையில் கலந்துரையாடல்!
ஜனாதிபதிக்கும் விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் அதிகாரிகளும் இடையில் இன்று புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
அறிவியல் ரீதியாகவும் திட்டமிடப்பட்ட முறையிலும் இந்த வருடப் பாதீடு செயல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
விசேட வைத்திய நிபுணர் சேவைக்கான சேவை யாப்பு தயாரிப்பது மற்றும் தொழில்சார் பிரச்சினைகள் குறித்து விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் அதிகாரிகளினால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு உட்பட பல திட்டங்கள் அடங்கிய பரிந்துரையை விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் அதிகாரிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு இதன்போது சமர்ப்பித்தனர்.
