வீதியில் சிதறிய மதுபான போத்தல்கள்: போக்குவரத்து முற்றாக தடை

அவிசாவளை – இரத்தினபுரி வீதியில் உள்ள கெடஹெத்த பகுதியில் மதுபானங்களை ஏற்றிச்சென்ற பாரவூர்தி இன்று புதன்கிழமை விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தைத் தொடர்ந்து, மதுபான போத்தல்கள் சாலை முழுவதும் சிதறிக் கிடந்த நிலையில் அவற்றை சேகரிக்கும் முயற்சியில் பொது மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்து காரணமாக அவிசாவளை – இரத்தினபுரி வீதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.