
வர்த்தகப் போரைத் தோற்றுவித்துள்ளது – ஃபிட்ச் ரேட்டிங்ஸ்
அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தினது நடவடிக்கையால் உலகளாவிய வர்த்தகப் போர் தொடங்கியுள்ளதுடன் இதனூடாக உலக பொருளாதார வளர்ச்சி வேகம் குறையக்கூடும் என ஃபிட்ச் ரேட்டிங்ஸ் எதிர்வு கூறியுள்ளது.
2024 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட 2.9 சதவீதம் என்ற உலக பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டில் 2.3 சதவீதமாக குறைவடையலாமென எதிர்வுகூறியுள்ளது.
2026ஆம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 2.2 சதவீதமாக வீழ்ச்சியடையக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 2025ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி முன்னறிவிப்பை 2.1 சதவீதத்திலிருந்து 1.7 சதவீதமாகவும், 2026 ஆம் ஆண்டுக்கான முன்னறிவிப்பை 1.7 சதவீதத்திலிருந்து 1.5 சதவீதமாகவும் குறைத்துள்ளதாக ஃபிட்ச் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தின் செயற்பாடு எவ்வளவு தூரம் நீடிக்கும் என்ற நிச்சயமற்ற தன்மை காணப்படுகிறது.
இது வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களின் எதிர்வு கூறல்களை விடவும் நிலைமை கடுமையானதாக இருக்கலாம் என ஃபிட்ச் ரேட்டிங்ஸ் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உற்பத்தியை அதிகரித்து வர்த்தக பற்றாக்குறையை குறைப்பதனை நோக்கமாகக் கொண்டு அமெரிக்காவின் புதிய நிர்வாகம் இறக்குமதிக்கான மாற்று நிகழ்ச்சி நிரல் ஒன்றை வகுத்துள்ளது.
இந்த இலக்கை அதிக வரி விதிப்புகளால் அடைவதற்கு அமெரிக்கா எதிர்பார்க்கிறது.
வரி அதிகரிப்புகள் நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என ஃபிட்ச் ரேட்டிங்ஸ் எதிர்வு கூறியுள்ளது.
நிறுவனங்களின் செலவுகள் அதிகரித்து முதலீட்டுக்கான நிச்சயமற்ற நிலை உருவாகலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் கிழக்காசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஏற்றுமதி உற்பத்தி துறையினரும் பாதிப்படைவார்கள் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வரி அதிகரிப்பு திட்டம் 2026 ஆம் ஆண்டுக்குள் அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் குறைக்கும் எனவும் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் கணிப்பிட்டுள்ளது.
