இந்தியாவில் அதிக வருமான வரி செலுத்திய பிரபலம்

இந்தியாவில் இந்த ஆண்டு அதிக வருமான வரி செலுத்திய பிரபலமாக அமிதாப் பச்சன் இடம்பிடித்துள்ளார்.

இந்திய மதிப்பில் சுமார் 120 கோடி ரூபாயை வரியாக செலுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2024 -2025 ஆம் நிதியாண்டில் 350 கோடி ரூபாயை அமிதாப் பச்சன் வருமானமாக ஈட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு ஷாருக்கான், ரூ.92 கோடி வரி செலுத்தி, அதிக வருமான வரி செலுத்திய பிரபலமாக இருந்தார்.