இயக்குநராகும் நடிகர் ரவி மோகன்

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து நடித்துக் கொண்டு வருபவர் ரவி மோகன் ஆவார்.

இவர் தற்போது சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் ரவி மோகன் நடிப்பைத் தொடர்ந்து படம் இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளன.

இந்தப் படத்தில் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விரைவில், இந்தப் படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.